Welcome Guest, Login or Register

எங்களை பற்றி


எங்களை பற்றி அறிமுகம்


Welcome to Shri Mangalambigai Matrimony

ஸ்ரீ மங்களாம்பிகை மேட்ரிமோனி சென்னை மாநகரின் கொளத்தூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. எங்கள் மேட்ரிமோனியில் அனைத்து மதம் மற்றும் அனைத்து சாதியினரும் பதியலாம். குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை வழங்குகிறோம்.

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

தொடர்புக்கு : + 91 638 444 77 22

இதில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரன்களையும் எங்கள் நிறுவனம் தொடர்பு கொண்டு திருமணம் ஆகவில்லை என உறுதி செய்த பின்னரே முகவரி, அலைபேசி எண் தரப்படும். அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

மணமகன், மணமகள் குடும்பங்களை பற்றி விசாரித்து கொள்வது அவரவர் வீட்டார் பொறுப்பு.

எங்கள் சேவை தகவல் மட்டுமே. புரோக்கர் கமிஷன் கிடையாது. இதில் பணம், நகை மற்றும் பொருள் எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல.

விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்


ஸ்ரீ மங்களாம்பிகை ஜோதிட நிலையம்

நமது ஜோதிட நிலையம் ஆயிரக்கணக்கான ஜாதகங்களையும், நிறைய திருமண பொருத்தங்களையும் பார்த்து கொடுத்து நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன…

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தெளிவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறோம். திருமணம், தொழில், கல்வி மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனித்து, உங்கள் வாழ்க்கையை மேலும் சிறப்பிக்க தேவையான வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்குகிறோம். ஜோதிடராக, நான் இந்தத் துறையில் 15 வருடங்களாக ஆராய்ச்சி செய்து பயணித்து வருகிறேன்.

சேவைகள்:

1. ஜாதகம்:

உங்கள் ஜாதகம் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது:

  • பிறந்த தேதி (Date of Birth)
  • பிறந்த நேரம் (Time of Birth)
  • பிறந்த இடம் (Place of Birth)
  • உங்கள் பெயர்

இந்த தகவல்களின் அடிப்படையில், ஜாதகம் கணிக்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தேவையான வழிபாடுகள், தாந்த்ரீக பரிகாரங்கள் ஆகியவை தெளிவாக கூறப்படும். வாழ்நாள் முழுவதும் என்ன செய்தால் நல்லது நடக்கும் என்பது தெளிவாகக் கூறப்படும். ஒருமுறை ஜாதகம் பார்த்தால், உங்களை சுற்றி இருப்பவர்கள் பெருமைப்படும் அளவுக்கு இருக்கும்.

2. சிறப்புக்கள்:
  • பாரம்பரிய ஜோதிடம்
  • சந்திர நாடி
  • பிருகு நந்தி நாடி
  • நியூமராலஜி (எண்கணிதம்)

ஜாதகம் இல்லாதவர்களுக்குப் பிரசன்னம் மூலம் சிறப்பான பதில்கள் வழங்கப்படுகின்றன.

3. திருமண பொருத்தம்:

நட்சத்திர பொருத்தம், தோஷங்கள், குரு பலன், புத்ரபாக்கியம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவற்றை தற்காலிக ஜோதிட முறையில் ஆண் மற்றும் பெண் இருவரின் ஜாதகத்திலும் மதிப்பீடு செய்து, திருமணத்திற்கு உண்டான பலன் உள்ளதா என்பதை தெரிவிக்கின்றோம்.

4. நியூமராலஜி (எண்கணிதம்):

DATE OF BIRTH அடிப்படையில், கீழ்க்காணும் வகையான அதிர்ஷ்டங்களை வழங்குகிறோம்:

  • குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர்
  • உங்கள் நிறுவனத்திற்கு சரியான பெயர்
  • வாகன எண்
  • தொலைபேசி எண்
  • அதிர்ஷ்ட ராசி கற்கள்
5. பிரசன்னம்:

உங்கள் கேள்விகளுக்கு உடனடி பதிலளிக்க வேண்டுமானால், பிரசன்னம் சிறந்த வழியாகும். எனக்கு 16 வகை பிரசன்னம் தெரியும்:

  • ஜாமக்கோள் பிரசன்னம் (மிகப் பிரபலமானது)
  • Tarot Card Reading (வெளிநாடுகளில் பயன்படும் சித்திரச்சீட்டு முறையில்)

நாங்கள் தரும் வசதிகள்:

வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். பதில்கள் வாட்ஸ்அப்பில் Voice Message மற்றும் Text Message ஆக வழங்கப்படும். முதலில் ஜாதக பலன்கள் சொல்லப்படும். பின்னர் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

எங்களது நோக்கம்:

பாரம்பரிய மற்றும் தற்காலிக ஜோதிட விதிகளின்படி கிரகங்களைப் பார்த்து மட்டும் பலன்கள் கூறப்படும். பணம் என்பது முக்கியமல்ல. இறைவன் அருளால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். பலன் பார்த்த பிறகு நாங்கள் சொன்ன நல்ல விஷயங்கள் நிச்சயம் நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வது ஒவ்வொரு ஜோதிடரின் கடமை. நானும் அதையே செய்கிறேன்.

நீங்களும் நன்றாக இருக்க வேண்டும். நானும் நன்றாக இருக்க வேண்டும்.

முகம் சுளிக்கவோ மனம் வருத்தப்படும்படியாகவோ இல்லாமல், நல்வழிகாட்டுதல்களால் மனநிம்மதி கிடைக்கும் என்பதில் உறுதி உள்ளது.

குறிப்பு: பிரசன்னம் பார்ப்பதற்கு ஜாதகம் தேவையில்லை. நீங்கள் அனுப்பவேண்டியது:

  • உங்கள் கேள்வி
  • உங்கள் வயது
  • உங்கள் பெயர்

தொடர்பு:

உங்கள் சந்தேகங்களுக்கு உடனடி உதவியை நாங்கள் வழங்குகிறோம்.

தொலைபேசி எண்கள்:
63844 47722
93630 37722

TERMS & CONDITIONS

  • ஸ்ரீ மங்களாம்பிகை மேட்ரிமோனி திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
  • ஸ்ரீ மங்களாம்பிகை மேட்ரிமோனி திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் ஆண்களாக இருந்தால் 21 வயதும், பெண்களாக இருந்தால் 18 வயதும் கண்டிப்பான முறையில் நிரம்பியிருக்க வேண்டும்.
  • பதிவதற்கு வரனின் பெற்றோர் ஆதார் எண் மற்றும் அதனுடன் தொடர்புடைய மொபைல் எண் அவசியம்.
  • ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், 1 புகைப்படம் (Photo) மட்டும் போதுமானதாகும்.
  • பதிவு செய்வதை ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
  • வரன்கள் ஜாதகக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும் (முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு ராசி, அம்சம் பதிவு செய்ய அவசியம் இல்லை).
  • பதிவு செய்து உடனே பதிவு எண் (ID Number), கடவுச்சொல் (Password) உங்கள் வாட்ஸாப் (Whatsapp) க்கு அனுப்பப்படும்.
  • பதிவு ௭ண் கிடைத்தவுடன் ௨ங்கள் பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம் தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்களை வாட்ஸாப் (Whatsapp) மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
  • உங்களது பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படும்.
  • தாங்களும் தங்கள் கடவுச்சொல்லை (PASSWORD) எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.
  • அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் உங்களை பற்றிய தகவல் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
  • உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் shrimangalambigai@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்
  • இரு வீட்டார்கள் பற்றிய விபரங்களை நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், எங்களுடைய சேவை தகவல் மட்டுமே
  • இங்கு போட்டோவுடன் பதிந்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.
  • மேலும் விவரங்களுக்கு Payment Options
  • திருமணம் நிச்சயம் செய்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
  • எந்த சூழ்நிலையிலும் செலுத்திய தொகை திரும்பப் பெற முடியாது.